20 ஆண்டுகளுக்குப் பின் ஒன்று சேர்ந்த காவலர் பயிற்சியாளர்கள்

20 ஆண்டுகளுக்குப் பின் ஒன்று சேர்ந்த காவலர் பயிற்சியாளர்கள்
X

குமாரபாளையம் அருகே 20 ஆண்டுகளுக்கு பின் ஒன்று சேர்ந்த காவலர் பயிற்சியாளர்கள்.

குமாரபாளையம் அருகே 20 ஆண்டுகளுக்கு பின் காவலர் பயிற்சியாளர்கள் ஒன்று சேர்ந்தனர்.

சேலம் ஆயுதப்படையில் 2002ம் ஆண்டு காவலர் பயிற்சி பெற்ற 11 அணியினரில் 8வது அணியினர் 26 தலைமை காவலர்கள் 20 ஆண்டுகளுக்கு பின் குமாரபாளையத்தில் ஒன்று சேர்ந்தனர்.

முன்னதாக சேலம் அருகே உள்ள வெண்ணங்குடி முனியப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். தாங்கள் பயிற்சி பெற்ற சேலம் ஆயுதப்படை மைதானத்திற்கு சென்று பயிற்சியாளர் முரளியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பின்னர் குமாரபாளையம் அருகே கோட்டைமேடு பகுதியில் சந்தித்தனர்.

அங்கு தங்கள் பயிற்சியின் போது ஏற்பட்ட அனுபவங்கள், தற்போது பணியிடங்களில் சந்தித்த அனுபவங்கள், தங்கள் குடும்பத்தினர்,குழந்தைகள் படிப்பு,உள்ளிட்டவைகள் குறித்து தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள். குமாரபாளையம் பகுதியில் உள்ள யாசகர்கள், ஆதரவற்றவர்கள் 50க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள். குமாரபாளையம் பகுதியில் உள்ள இரண்டு ஆதரவற்றோர் காப்பகத்திற்கு 25 கிலோ அரிசி சிப்பம் தலா ஒன்று, மளிகை சாமான்கள் வழங்கப்பட்டது.

அடுத்த ஆண்டு அனைவரும் குடும்பத்தினருடன் இதே போல் சந்திப்பது என்று முடிவு செய்தனர். இதில் பயிற்சி அணியின் தலைவராக இருந்த ராஜு, குமாரபாளையம் போக்குவரத்து எஸ்.ஐ. வெங்கடேஷ், சுகுமார், உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.

இந்த சந்திப்பில் சேலம், புதுக்கோட்டை, கரூர், நாமக்கல், சென்னை, விழுப்புரம், ஈரோடு, சத்தியமங்கலம்,திருவண்ணாமலை உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து வந்து பங்கேற்றனர். அனைவரும் ஒன்று சேர்ந்து குழு போட்டோ எடுத்துக்கொண்டனர்.

Tags

Next Story
ai marketing future