அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு முகாம் நடத்திய போலீசார்

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு முகாம் நடத்திய போலீசார்
X

குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் எஸ்.ஐ. மலர்விழி பேசினார்.

குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், குமாரபாளையம் போலீசார் விழிப்புணர்வு முகாம் நடத்தினர்.

பள்ளி குழந்தைகல் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வரும் சூழலில், மாணவியரின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகாம், குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பள்ளியில் தலைமை ஆசிரியை (பொ) சாரதா தலைமை வகித்தார்.

இதில், எஸ்.ஐ. மலர்விழி பங்கேற்று பேசியதாவது: பெண்கள், மாணவியர்கள் பாதுகாப்பிற்காக போக்சோ சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து ஒவ்வொரு மாணவியரும் அறிந்து கொள்ள வேண்டும். எந்த நேரத்தில் ஆபத்து என்றாலும் குறிப்பிட்ட தொலைபேசி வாயிலாகவோ, போக்சோ ஆப் பதிவிறக்கம் செய்யப்பட்ட மொபைல் போனை அசைத்தாலோ, நீங்கள் இருக்கும் இடம் அறிந்து, போலீசார் அங்கு வந்து உங்களுக்கு பாதுகாப்பு வழங்குவார்கள்.

பெற்றோர்களிடம் பழகுவது போலவே, பெண்கள் எல்லோரிடமும் பழக கூடாது. உறவினர்கள், நண்பர்கள், ஷாப்பிங் செல்லும் இடங்களில், சினிமா தியேட்டர்களில், ஓட்டல்களில், பள்ளி, கல்லூரி ஊழியர்கள் உள்ளிட்ட பல தரப்பினரிடம் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story
சும்மா விராட் கோலி மாதிரி ஃபிட்டான வாழ்க்கை வாழணுமா? இதான் டிரிக்ஸ்..!