அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு முகாம்
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் போலீசார்.
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நேற்றுமுன்தினம் இரு தரப்பினரரிடையே, பள்ளி நேரம் முடிந்து, மாலை 05:00 மணியளவில் கிழக்கு காவேரி நகர் பாறை மீது தகராறு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்து, நேரில் சென்று சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இதே பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆடலரசு தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எஸ்.ஐ. நந்தகுமார் மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்துக்கள் கூறினார்.
எஸ்.ஐ. நந்தகுமார் பேசுகையில், இந்திய தண்டனை சட்டம், வழக்கு பிரிவுகள், யாவருக்கும் பொதுவானது. மாணவர்கள் கல்வி பயிலும் வயதில் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். சமூக விரோத செயலில் ஈடுபட்டாலோ, குற்றம் செய்பவருக்கு துணையாக இருந்தாலோ தண்டனை இருவருக்கும் உண்டு. எப்.ஐ.ஆர். எனப்படும் வழக்குபதிவு செய்து விட்டால், மாணவர்கள் உயர்கல்வி பயிலவோ, வெளிநாடு செல்லவோ, அரசு வேலை பெறவோ முடியாது. இனியொருமுறை தகராறில் ஈடுபட்டால் நிச்சயம் சம்பந்தப்பட்ட ,மாணவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu