குமாரபாளையம் ஜே.கே.கே பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு முகாம்

குமாரபாளையம் ஜே.கே.கே பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு முகாம்
X

குமாரபாளையம் அரசு உதவி பெறும் ஜே.கே.கே. பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் பேசிய குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி.

குமாரபாளையத்தில் உள்ள அரசு உதவி பெறும் ஜே.கே.கே பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், காவல்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவதால், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் மாணவியரின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிறப்பு முகாம், குமாரபாளையம் அரசு உதவி பெறும் ஜே.கே.கே. ரங்கம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்ளியில் தலைமை ஆசிரியை நளினி தேவி தலைமை வகித்தார். குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி பங்கேற்று பேசியதாவது:

பெண்கள், மாணவியர் பாதுகாப்பிற்காக போக்சோ சட்டம், தற்போது நடைமுறையில் உள்ளது. இது குறித்து, ஒவ்வொரு மாணவியரும் நன்கு தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, எந்த நேரத்தில் ஆபத்து என்றாலும், குறிப்பிட்ட தொலைபேசி வாயிலாகவோ, போக்சோ ஆப் பதிவிறக்கம் செய்யப்பட்ட மொபைல் போனை அசைத்தாலோ, நீங்கள் இருக்கும் இடம் அறிந்து போலீசார் அங்கு வந்து உங்களுக்கு பாதுகாப்பு வழங்குவார்கள்.

மாணவிகள் எப்போதும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். முன்பின் தெரியாதவர்களிடம் பழகக்கூடாது. பெற்றோரிடம் பழகுவது போல எல்லோரிடமும் பழகக்கூடாது. உறவினர்கள், நண்பர்கள், வெளியே கடைகளுக்கு செல்லும் இடங்களில், பள்ளி, கல்லூரி ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரிடமுமே விழிப்புணர்வுடன், முன் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு வழங்கப்படும் துண்டு பிரசுரங்களை பார்த்து, மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ளுங்கள் என்றார்.

இந்த நிகழ்ச்சியில், எஸ்.ஐ.-க்கள் மலர்விழி, நந்தகுமார், சேகரன், சுந்தரராஜ், முருகேசன், எஸ்.எஸ்.ஐ. இளமுருகன், சிவகுமார், தன்ராஜ் உள்ளிட்ட போலீசார் பலரும் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!