குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில் போலீசார் தீவிர ரோந்து

குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில் போலீசார் தீவிர ரோந்து
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில் தீவிர ரோந்து பணியில் போலீசார் ஈடுபடுவார்கள் என டி.எஸ்.பி. தெரிவித்துள்ளார்.

குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என டி.எஸ்.பி. தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருச்செங்கோடு டி.எஸ்.பி. சீனிவாசன் கூறுகையில், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக காவிரியில் நீர் வரத்து அதிகரித்ததால் மேட்டூர் அணை நிரம்பியது. இதனால் காவிரி கரையோரப்பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டிய ஏற்பாடுகளை செய்ய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங், சேலம் சரக டி.ஐ.ஜி மகேஸ்வரி குமாரபாளையம் நேரில் வந்து ஆய்வு செய்தனர். நாமக்கல் மாவட்ட மேலிட பார்வையாளர் மகேஸ்வரன், குமாரபாளையம் காவிரி கரையோரப்பகுதியான மணிமேகலை தெரு, இந்திரா நகர், கலைமகள் தெரு, புத்தர் தெரு நகராட்சி தொடக்கப்பள்ளி, நகராட்சி நடராஜா திருமண மண்டபம், பாலக்கரை அண்ணா நகர், பாலக்கரை ரேசன் கடை, சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார மையம் ஆகிய இடங்களை ஆய்வு செய்தார்.

காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் எண்ணிக்கை, இருக்கும் வீடுகள் ஆகியன குறித்தும், இவர்கள் தங்க வைக்கப்படும் இடங்கள் குறித்தும், அங்கு தேவையான வசதிகள் செய்து தயார் நிலையில் உள்ளனவா? என்பது குறித்து கேட்டறிந்தார். ரேஷன் கடைகளில் போதிய இருப்பு உள்ளனவா என்று கடைக்கரர்களிடமும், ரேஷன் பொருட்கள் சரியான முறையில் விநியோகம் செய்யபடுகிறதா? என்றும் கேட்டறிந்தார்.

அந்தந்த பகுதி மருத்துவமனைகளில் மருந்துகள் போதிய இருப்பு உள்ளனவா? என்றும் ஆய்வு செய்தார். இந்நிலையில் அணை நிரம்பிய நிலையில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. காவிரி கரையோரப்பகுதி மக்கள் பாதுகாப்பு குறித்து போலீசார் சார்பில் தீவிர ரோந்து பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது என அவர் தெரிவித்தார்.

Tags

Next Story