அரசியல் கட்சியினர் பிளெக்ஸ் வைக்க போலீசார் அறிவுரை
அரசியல் கட்சியினர் பிளெக்ஸ் வைக்க
போலீசார் அறிவுரை
குமாரபாளையம் அரசியல் கட்சியினர் பிளெக்ஸ் வைக்க
போலீசார் அறிவுரை கூறினர்.
குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில், அனைத்து அரசியல் கட்சியினருடன் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தவமணி அரசியல்வாதிகளிடம் கூறியதாவது:
உயர்நீதிமன்ற உத்திரவின்படி, பிளெக்ஸ் போர்டுகளை போக்குவரத்துக்கு இடையூறாக வைக்க கூடாது. நிரந்தரமாக பொது இடங்களில் வைக்க கூடாது. பிளெக்ஸ் வைத்து மூன்று நாட்களுக்குள் அகற்றி விட வேண்டும். ஒவ்வொரு பிளெக்ஸ் போர்டில், பிளெக்ஸ் நிறுவன பெயர் மற்றும் மொபைல் எண் ஆகியவை நிச்சயம் இடம்பெற வேண்டும். பிளெக்ஸ் வைக்கும் முன்பு, நகராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற்று, போலீசார் வசம் தகவல் தெரிவித்து பின்னர்தான் வைக்க வேண்டும். விதி மீறும் பிளெக்ஸ் நிறுவனத்தார் மற்றும் அரசியல் கட்சியினர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம், தமிழக வெற்றிக்கழகம், உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.
படவிளக்கம் :
பிளெக்ஸ் வைப்பது சம்பந்தமாக, அனைத்து அரசியல் கட்சியினருடன் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ஆலோசனை கூட்டம் நடந்தது
--
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu