பொக்லின் உரிமையாளர்கள் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் நூற்றுக்கும் மேற்பட்ட பொக்லின்கள் நிறுத்தி வைப்பு

பொக்லின் உரிமையாளர்கள் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம்  நூற்றுக்கும் மேற்பட்ட  பொக்லின்கள் நிறுத்தி வைப்பு
X
குமாரபாளையத்தில் பொக்லின் உரிமையாளர்கள் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளனர்.

பொக்லின் உரிமையாளர்கள் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம்

நூற்றுக்கும் மேற்பட்ட பொக்லின்கள் நிறுத்தி வைப்பு

குமாரபாளையத்தில் பொக்லின் உரிமையாளர்கள் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளனர்.

குமாரபாளையத்தில் பொக்லின் உரிமையாளர்கள் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளதால், நூற்றுக்கும் மேற்பட்ட பொக்லின்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து பொக்லின் உரிமையாளர்கள் கூறியதாவது:

டீசல், உதிரி பாகங்கள், புதிய வாகனத்தின் விலை உயர்வு, இன்சூரன்ஸ், சாலை வரி உள்ளிட்ட பல காரணங்களால் தொடர்ந்து எங்களால் பழைய கட்டணத்திற்கு வேலை செய்ய முடிவதில்லை. இரண்டு மணி நேர வேலைக்கு, குறைந்த பட்ச தொகை மூவாயிரம் என நிர்ணயம் செய்துள்ளோம். அடுத்த ஒரு மணி நேரத்திற்கு ஆயிரத்து முன்னூறு என நிர்ணயம் செய்துள்ளோம். புதிய பொக்லின் தற்போது 43 லட்சம் ஆகிறது. ஆகவே எங்கள் கோரிக்கை வலியுறுத்தி ஏப். 22, 23 ஆகிய இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் செய்து வருகிறோம். எங்கள் கோரிக்கையை ஏற்று பொதுமக்கள் ஆதரவு தர வேண்டுகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

படவிளக்கம் :

குமாரபாளையத்தில் பொக்லின் உரிமையாளர்கள் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளனர்.

Next Story