குமாரபாளையத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய கவிஞர் சினேகன்

குமாரபாளையத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய கவிஞர் சினேகன்
X

குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் நலத்திட்ட உதவிகளை இளைஞரணி மாநில செயலர் கவிஞர் சினேகன் வழங்கினார்.

Public Meeting -மக்கள் நீதி மய்யம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Public Meeting -நாமக்கல் மேற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலர் காமராஜ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில இளைஞரணி செயலர் கவிஞர் சினேகன், மாநில துணை தலைவர்கள் தங்கவேலு, மவுரியா, மாநில மகளிரணி செயலர் மூகாம்பிகா உள்பட பலர் பங்கேற்று பேசினார்கள்.

கவிஞர் சினேகன் பேசுகையில், பல கோடிகளை வசதி உள்ளவர்களுக்கு தள்ளுபடி செய்தவர்கள், விவசாயிகள் கடனை மட்டும் ஏன் தள்ளுபடி செய்யவில்லை. அண்ணா, காமராஜ்,கக்கன் உள்ளிட்ட பல முன்னோர்கள் அலங்கரித்த இருக்கையில் இன்று அவர்களைப் போல் ஒருவர் கூட இல்லை என்பது வேதனை தருகிறது.

படித்தவர்கள் கல்லூரியில் வேலை செய்கிறார்கள்.படிக்காதவர்கள் கல்லூரி கட்டி வருகிறார்கள். எல்லா அரசியல்வதிகளுக்கும் தொழில் உண்டு. கமல்ஹாசனை பழி சொல்லாதீர்கள். தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. வினரின் வீடுகளில் நிச்சயம் ஒரு ஓட்டாவது மக்கள் நீதி மய்யத்திற்கு உள்ளது.பாராளுமன்றம் நோக்கி நாங்கள் பயணிக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், நாங்கள் வார்டு வாரியாக குழு அமைத்து முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம். அவர்களை ஒருங்கிணைத்து நடக்கிற கூட்டத்தில் தலைவர் கலந்து பேசுவார். ராகுலுடன் நடைபயணம் சென்றது அரசியல் கூட்டணிக்காக அல்ல, அனைவரிடமும் ஒற்றுமை மேலோங்க வேண்டும் என்பதால்தான். நடைபயணம் தற்போது மற்ற கட்சி தலைவர்கள் தொடங்கியுள்ளனர். நாங்கள் செய்வதைதான் மற்றவர்கள் செய்வார்கள். மற்றவர்கள் செய்வதை நாங்கள் செய்யமாட்டோம். மக்களை ஒன்று திரட்டுகிற அறிவிப்பை தலைவர் விரைவில் அறிவிப்பார்.

ஈரோடு தேர்தல் வேட்பாளர் குறித்து நாளை (இன்று) மாலைக்குள் அறிவிப்போம். நாளை காலை தலைவர் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. உதயநிதி போன்ற இளைஞர்கள் நல்ல பொறுப்புக்கு வருவதில் எங்களுக்கு எவ்வித ஆட்சேபனை இல்லை. இளைஞர்கள் பொறுப்புக்கு வரவேண்டும். அவர் செயல்பாட்டை பொறுத்திருந்து பார்ப்போம். தி.மு.க. ஆட்சியில் இரண்டாம் கட்ட தலைவர்களால் முரண்பாடுகள் நடந்து வருகிறது. அதனை கண்டு கட்சியின் தலைமை களையெடுக்க வேண்டும் என்றார்.

நிர்வாகிகள், சித்ரா, ரேவதி, உஷா, விமலா, நந்தகுமார், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்