பாமக மாவட்ட இளைஞர் சங்கம்- மாணவர் சங்க ஆலோசனை கூட்டம்

குமாரபாளையத்தில் பா.ம.க. மேற்கு மாவட்ட இளைஞர் சங்கம் மற்றும் மாணவர் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது
குமாரபாளையத்தில் பா.ம.க. மேற்கு மாவட்ட இளைஞர் சங்கம் மற்றும் மாணவர் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் மாவட்ட இளைஞர் அணி செயலர் கார்த்திக் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்தி, மாவட்ட செயலர் சுதாகர் பங்கேற்றனர்.
முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்தி கூறியதாவது:வருகிற நாடாளுமன்ற தேர்தலையொட்டி, நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி வழிகாட்டுதல் பேரில், திண்ணை பிரசாரம் தொடக்கி உள்ளோம். பா.ம.க. திட்டங்கள் அனைத்து கிராமங்களுக்கும் சென்றடைய, இளைஞர் சங்கம், மாணவர் சங்கம் மூலம் பணிகள் செய்து வருகிறோம். பொதுமக்கள் மத்தியில் பா.ம.க.விற்கு நல்ல வரவேற்பு உள்ளது.
அன்புமணிக்கு மக்கள் இந்த முறை வாய்ப்பு மக்கள் தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. சட்டம் ஒழுங்கு என பார்த்தால், தமிழகத்தில் கொலை, கொள்ளை அடிக்கடி நடந்து கொண்டுதான் உள்ளது. மது குடிக்க வேண்டாம் என சொன்னதிற்கு, நான்கு பேர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மதுவை ஒழிக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகளை மூடுவதுதான் முதல் கையெழுத்து என முதல்வர் கூறினார். அவருக்கு இன்னும் பேனா கிடைக்கவில்லை போலும். சட்டம் ஒழுங்கு சீராக, மதுக்கடைகளை மூட வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தல் தான் எங்கள் இலக்கு. அன்புமணியின் ஆட்சி அமைய வியூகம் வகுத்து பணியாற்றி வருகிறோம். எந்த மதம் ஆனாலும் அவர்கள் மனம் புண்படும்படி யாரும் பேச கூடாது. இந்து மதம் பற்றி பேசினால் என்னால் கூட ஏற்றுக்கொள்ள முடியாது.
முதல்வரின் மகன் இப்படி பேசுவது சரியல்ல. தமிழகத்தில் போதை மருந்து, போதை மாத்திரை விற்கப்பட்டுக் கொண்டுதான் உள்ளது. போதை பொருட்கள் விற்கப்படுவதை போலீஸ் துறையை கைவசம் வைத்துள்ள முதல்வர் நினைத்தால், ஒரு வாரத்தில் இதனை இல்லாமல் செய்து மாணவ, மாணவியர், மற்றும் இளைஞர் வாழ்வை காக்க முடியும், என அன்புமணி கூறியுள்ளார். பள்ளி, கல்லூரிகளில் போதை பொருட்கள் விற்கப்படுகிறது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில், மதுக்கடைகளை படிப்படியாக குறைப்போம் என சொல்லியுள்ளனர். ஆனால் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு கிடைக்க பா.ம.க. போராடும். இவ்வாறு அவர் கூறினார்.
ஒன்றிய செயலர் ஜெகந்நாதன், மாவட்ட தலைவர் மூர்த்தி, மாவட்ட துணை செயலர் சுப்பிரமணி, நகர செயலர் கோவிந்தன், வடிவேல், சிவராமன், லோகநாதன், பசுமை தாயகம் நிர்வாகிகள் ராமசாமி, கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu