குமாரபாளையத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணிக்கு உற்சாக வரவேற்பு

குமாரபாளையத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணிக்கு   உற்சாக வரவேற்பு
X

குமாரபாளையத்தில் பா.ம.க. மாநில தலைவர் அன்புமணிக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

குமாரபாளையத்தில் பா.ம.க. மாநில தலைவர் அன்புமணிக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், பவானியில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திற்கு செல்வதற்காக பா.ம.க. மாநில தலைவர் அன்புமணி சேலம் கோவை புறவழிச்சாலை வழியாக குமாரபாளையம் கத்தேரி பிரிவு வந்தார். அவருக்கு மாவட்ட, நகர நிர்வாகிகள் சார்பில் சால்வைகள் அணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர்.

மாவட்ட தலைவர் செந்தில்குமார், மாவட்ட துணை செயலர் மூர்த்தி, முன்னாள் மாவட்ட தலைவர் பழனிச்சாமி, மாவட்ட செயற்குழு தலைவர் கணேசன், மாவட்ட இளைஞர் அணி செயலர் கார்த்தி, முன்னாள் மாவட்ட செயலர் வேல்முருகன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!