கொரோனா காலத்தில் மதுக்கடை திறப்பதா?பள்ளிபாளையத்தில் பாமக ஆர்ப்பாட்டம்

மதுக்கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளிபாளையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர்.
கொரோனா பேரிடர் காலத்தில் மக்கள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும்போது மதுக்கடைகளை திறக்க வேண்டாம் என்பதை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அவ்வகையில், பள்ளிபாளையம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பி, கண்டன ஆர்ப்பாட்டம் பள்ளிிப்பாளையம் பேருந்து நிறுத்த பகுதியில் நடைபெற்றது. மாநில இளைஞர் சங்க துணை தலைவர் உமாசங்கர் தலைமை வகித்தார். நகர செயலாளர் உதயகுமார், நகரத் தலைவர் செந்தில்நாதன், மாவட்ட துணைத்தலைவர் கராத்தே என் சேகர், விளையாட்டுக் குழு செயலாளர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகளை திறக்காதே !பொது மக்களின் வாழ்வை சீரழிக்காதே! அனைவருக்கும் தடுப்பூசிகள் வழங்கிட நடவடிக்கை எடுத்திடுக! என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எழுப்பினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu