குமாரபாளையத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

குமாரபாளையத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
X

குமாரபாளையத்தில் நடைபெற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி துவக்கி வைத்தனர்.

குமாரபாளையத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

வேலூர், கந்தசாமி கண்டர் கல்லூரி ஜான் சிக்சான் சன்ஸ்தான் பொதுநல அமைப்பின் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி குமாரபாளையத்தில் நடைபெற்றது. போலீஸ் ஸ்டேஷன் முன்பு துவங்கிய பேரணியை இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாதைகள் ஏந்தியவாறும், கோஷங்கள் போட்டவாறும் மாணவ, மாணவியர் சென்றனர். இதில் பேராசிரியர்கள் டாக்டர்கள் திலகவதி, அசோக்குமார், ஜீவரேகா, ஒருங்கிணைப்பாளர் வடமலை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!