குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் 50 மரக்கன்றுகள் நடவு

குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் 50 மரக்கன்றுகள் நடவு
X

குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் பாலக்கரை பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டது.

மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி, குமாரபாளையம் நகரில் உள்ள 33 வார்டுகளில், வார்டு ஒன்றுக்கு தலா 50 மரக்கன்றுகள் நடும் பணி துவங்கியது.

மாவட்ட செயலர் காமராஜ் வழிகாட்டுதல்படி, நகர செயலர் சரவணன், வட்ட செயலர் யோகராஜ் தலைமை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணை செயலர் சிவகுமார் பங்கேற்று பாலக்கரை பகுதியில் மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்தார்.

நேற்று தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றதையொட்டி வார்டில் உள்ள பொதுமக்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ள சொல்லி வீடு, வீடாக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. பொதுமக்களுக்கு முகக்கவசங்கள், கிருமிநாசினி மருந்துகள் வழங்கப்பட்டன. 22வது வார்டு செயலர் ரேவதி, 21வது வார்டு கார்த்திக், 25வது வார்டு ராஜு, 12வது உஷா, சந்தோஷ், நாகார்ஜூன் உள்பட பலர் பங்கேற்றனர்.

மரக்கன்றுகள் நடப்பட்டு அவைகள் ஆடு, மாடு, மற்றும் நாய்களால் சேதப்படுத்தப்படாமல் இருக்க வேலியும் அமைக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!