குமாரபாளையம் நகராட்சி சார்பில் 100 மரக்கன்றுகள் நடும் விழா: சேர்மன் துவக்கி வைப்பு
X
குமாரபாளையம் நகராட்சி சார்பில் 100 மரக்கன்றுகள் நடும் விழாவை சேர்மன் விஜய்கண்ணன் துவக்கி வைத்தார்.
By - K.S.Balakumaran, Reporter |7 May 2022 5:45 PM IST
குமாரபாளையம் நகராட்சி சார்பில் 100 மரக்கன்றுகள் நடும் விழாவை சேர்மன் துவக்கி வைத்தார்.
தி.மு.க. அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டியும், இரண்டாம் ஆண்டு துவக்க விழாவையொட்டியும் குமாரபாளையம் நகராட்சி சார்பில் 100 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
கமிஷனர் விஜயகுமார் தலைமை வகிக்க, சேர்மன் விஜய்கண்ணன் பங்கேற்று 100 மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தார். பொறியாளர் ராஜேந்திரன், உதவி பொறியாளர் செந்தில்குமார், கவுன்சிலர்கள் ஜேம்ஸ், வேல்முருகன், சியாமளா, கிருஷ்ணவேணி, கனகலட்சுமி, புஷ்பா, நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில், உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu