குமாரபாளையத்தில் பைப் லைன் பழுதால் நடைமேடை உடைப்பு: வாகன ஓட்டிகள் அவதி

குமாரபாளையத்தில் குழாய் சீரமைப்பு என நடைமேடையை பணியாளர்கள் உடைத்து எடுத்தனர்.
குமாரபாளையத்தில் குழாய் சீரமைப்பு என நடைமேடையை பணியாளர்கள் உடைத்து எடுத்தனர்.
குமாரபாளையம் நகரில் 14 கோடி ரூபாய் செலவில் சேலம் சாலையில் சவுண்டம்மன் கோவில் பகுதியிலிருந்து, சேலம் கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவு வரை 2 கி.மீ. தூரத்திற்கு இருபுறமும் வடிகால், நடைமேடை ஆகியன அமைக்கும் பணி 10 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. பணிகள் முடியும் நிலையில் உள்ளபோது, போலீஸ் ஸ்டேஷன் எதிரில் பைப் லைன் பழுது என, புதிதாக போடபட்ட நடைமேடை உடைக்கப்பட்டது. பணிகள் முடிந்து மண்ணை கொட்டி மூடி பேவர் பிளாக் கற்கள் வைக்கப்பட்டன.
லாரிகள், பஸ்கள் பஸ் ஸ்டாண்ட் சாலைக்கு திரும்பும் இடம் என்பதால் இந்த பள்ளத்தின் மீது ஏறி செல்லும் நிலை உருவாகும். அப்போது, கடைமைக்காக மூடப்பட்ட பள்ளத்தில் வாகனங்கள் சிக்கும் நிலை ஏற்படும். இதனை முன்பு இருந்தது போல் உறுதியாக மூட வேண்டும். இதனை நடைமேடை அமைத்த நெடுஞ்சாலைத் துறையினர் இதனை சரி செய்வதா? அல்லது குடிநீர் குழாய் சீரமைத்த நகராட்சி நிர்வாகத்தினர் சீரமைப்பதா? என கேள்வி எழுந்துள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன் இந்த பள்ளத்தை சீர் படுத்த வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu