குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் தேசிய தர உறுதி சான்று குழு 3ம் கட்ட ஆய்வு

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் தேசிய தர உறுதி சான்று குழு 3ம் கட்ட ஆய்வு
X

குமாரபாளையம் ஜி.ஹெச்.ல் தேசிய தர உறுதி சான்று குழுவினர் 3ம் கட்ட ஆய்வு செய்தனர்.

குமாரபாளையம் ஜி.ஹெச்.ல் தேசிய தர உறுதி சான்று குழுவினர் 3ம் கட்ட ஆய்வு செய்தனர்.

குமாரபாளையம் ஜி.ஹெச்.ல் தேசிய தர உறுதி சான்று குழுவினர் 3ம் கட்ட ஆய்வு செய்தனர். குமாரபாளையம் ஜி.ஹெச்.இல் தேசிய தரச் சான்று 3ம் கட்ட ஆய்வு மற்றும் பயிற்சி முகாம் நடைபெற்றது.

இது குறித்து ஜி.ஹெச் தலைமை டாக்டர் பாரதி கூறியதாவது:- நாமக்கல் சுகாதார இணை இயக்குனர் ராஜ்மோகன் தலைமையில், மண்டல அலுவலர் ஜெயந்தி உள்ளிட்ட தேசிய தர உறுதி சான்று குழுவினர் பிப். 13ல் முதற்கட்ட ஆய்வு செய்தனர். தேசிய தரச்சான்று மண்டல அலுவலர் டாக்டர் அசோக் தலைமையிலான குழுவினர் 2ம் கட்ட ஆய்வு செய்ததுடன், டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவமனை பணியாளர்களுக்கு பயிற்சியும் வழங்கினர். இன்று நடைபெற்ற 3ம் கட்ட ஆய்வில் ஈரோடு, ஜி.ஹெச்.,மேற்பார்வையாளர் டாக்டர் வெங்கடேசன், தர்மபுரி சுகாதார துறை இணை இயக்குனர் டாக்டர் ராஜேஷ்கண்ணா, அரூர் ஜி.ஹெச்., தரக்கட்டுபாடு ஒருங்கிணைப்பாளர் வாசுகி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஜி.ஹெச்.,ல் எத்தனை டாக்டர்கள், நர்ஸ்கள், பணியாளர்கள் உள்ளனர்? சம்பளம் எவ்வளவு தரப்படுகிறது? மொத்தம் இருக்கும் படுக்கை வசதி எத்தனை? என்பது உள்ளிட்ட பல கேள்விகள் கேட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
ai in future education