திருச்செங்கோடு : பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்

திருச்செங்கோடு : பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்
X

திருச்செங்கோடு நகர காங்கிரஸ் கட்சியினர்,  பெட்ரோல் பங்க் வளாகப்பகுதியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

திருச்செங்கோடு-சங்ககிரி சாலை பெட்ரோல் பங்கில் காங்கிரஸ் கட்சியினர் விலை உயர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தினர்.

நாடு முழுவதும் பெட்ரோல்,டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடைபெற்றது.

அவ்வகையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, சங்ககிரி சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் பகுதியில், திருச்செங்கோடு நகர காங்கிரஸ் கட்சியினர், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கையெழுத்து இயக்கத்தை நடத்தினார். இந்த நிகழ்வில் ஏராளமான காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story