குமாரபாளையம் காந்தி தெருவில் வடிகால், தார் சாலை அமைக்க மக்கள் நீதி மய்யம் மனு

குமாரபாளையம் காந்தி தெருவில் வடிகால், தார் சாலை அமைக்க மக்கள் நீதி மய்யம் மனு
X

குமாரபாளையம் காந்தி தெரு பகுதியில் வடிகால், தார் சாலை அமைத்து தர கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் நகராட்சியில் மனு கொடுக்கப்பட்டது.

குமாரபாளையம் காந்தி தெரு பகுதியில் வடிகால், தார் சாலை அமைத்து தர கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் நகராட்சியில் மனு கொடுக்கப்பட்டது.

குமாரபாளையம் ஆனங்கூர் சாலை புதிய வார்டு 23, பழைய வார்டு 12, சுந்தரம் நகர் எதிர் வீதி, காந்தி தெருவில் வடிகால், புதிய தார் சாலை அமைக்கப்படாமல் உள்ளது.

இதனை அமைத்து தர வேண்டி, மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில் நகர செயலர் சித்ரா தலைமையில் நகராட்சி கமிஷனர் சசிகலாவிடம் மனு கொடுக்கப்பட்டது. மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் கூறியுள்ளார். நிர்வாகிகள் ரேவதி, உஷா, கிருத்திகா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai marketing future