குமாரபாளையத்திலிருந்து கோவைக்கு நேரடியாக பேருந்து விட வேண்டும் என கலெக்டருக்கு மனு

குமாரபாளையத்திலிருந்து கோவைக்கு நேரடியாக பேருந்து விட வேண்டும் என கலெக்டருக்கு மனு
X
குமாரபாளையத்திலிருந்து கோவைக்கு நேரடியாக பேருந்து விட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா மாவட்ட கலெக்டருக்கு அனுப்பிய மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

குமாரபாளையத்திலிருந்து கோயம்புத்தூருக்கு செல்வதென்றால் பவானி லட்சுமிநகர் அல்லது ஈரோடு சென்று கோவைக்கு செல்ல வேண்டி உள்ளது. கோவையிலிருந்து குமாரபாளையம், குமாரபாளையத்திலிருந்து கோவைக்கு நேரடியாக பேருந்து விட வேண்டும். குமாரபாளையம் பகுதியில் கைத்தறி மற்றும் விசைத்தறி ஜவுளி உற்பத்தி அதிகம் என்பதால் கோவை வியாபாரிகள் மற்றும் வடமாநில வியாபாரிகள் குமாரபாளையம் வரவும் தொழில் வளம் பெருகவும் உதவியாக இருக்கும். அவசர சிகிச்சைக்காக

கோயம்புத்தூர் மருத்துவமனைக்கு மற்றும் அவசர தேவைக்கு செல்ல வேண்டுமென்றால், பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆகையால் பொதுமக்களின் நலன், தொழில் வளம் கருதி குமாரபாளையத்திலிருந்து கோவை செல்வதற்கு அரசு பேருந்துகள் விடுமாறு மக்கள் நீதி மய்யம் மற்றும் பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story