கள்ள காதலியுடன் வலம் வந்த நபர்: அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம்

கள்ள காதலியுடன் வலம் வந்த நபர்: அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம்
X

பைல் படம்.

மனைவி இருக்கையில், காதலியுடன் வலம் வந்த நபர் குமாரபாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்தார்.

சேலம் சண்முகா நகர், தாதகாபட்டியை சேர்ந்தவர் சிரஞ்சீவி, 29. இவருக்கும், கனகா என்பவருக்கும் திருமணமாகி, கனகா 8 மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார். மனைவிக்கு தெரியாமல் குமாரபாளையத்தை சேர்ந்த வினோதா, 19, என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இது சிரஞ்சீவியின் தாயார், சித்திக்கு தெரியும் என இவர் கூறி வரும் நிலையில், மே. 27ல் வினோதாவுடன் வீட்டை விட்டு வெளியேறி, சென்னை, பாண்டிச்சேரி, நாமக்கல், ஈரோடு ஆகிய இடங்களில் சுற்றி வந்துள்ளனர்.

நம்பியூர் என்ற ஊரில் இருந்த போது, வினோதாவின் பெற்றோர், அண்ணன், உறவினர்கள் உள்ளிட்ட 8 பேர் வந்து குமாரபாளையம் அழைத்து வந்துள்ளனர். சேலம் கோவை புறவழிச்சாலையில் உள்ள வெங்கடேஸ்வரா பேக்கரியில் டீ குடித்து விட்டு, கைகளால் சிரஞ்சீவியை தாக்கியுள்ளனர். புறவழிச்சாலையில் சாலையை நடந்து கடந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி, இவர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் 8 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா