குமாரபாளையத்தில் பெரியார் நினைவு நாள் அனுசரிப்பு

குமாரபாளையத்தில் பெரியார் நினைவு  நாள் அனுசரிப்பு
X

குமாரபாளையத்தில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் பெரியார் நினைவுநாள் அனுசரிப்பு.

குமாரபாளையத்தில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் பெரியாரின் 48 வது நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.

குமாரபாளையத்தில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் பெரியார் நினைவுநாள் நகர தலைவர் தண்டபாணி தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது. நகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள பெரியார் திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து கத்தேரி சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் திருவுருவச்சிலைக்கு வாகன பேரணியாக சென்று மாலைகள் அணிவிக்கப்பட்டது. அங்கு நடந்த அஞ்சலி கூட்டத்தில் பெரியாரின் நினைவலைகள் பகிர்ந்து கொள்ளப்பட்டது. மாவட்ட தலைவர் சுவாமிநாதன், மாவட்ட காப்பாளர் கேப்டன் அண்ணாதுரை, நிர்வாகிகள் வடிவேல், மாதேஸ்வரன், முருகன், சந்திரா, ரம்யா, ரேணுகா, திராவிடமணி, பிரகாஷ், குமார், கார்த்திக், தி.மு.க. நிர்வாகி முத்து உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்