குமாரபாளையத்தில் பெரியார் 143வது பிறந்த நாள் விழா: கட்சியினர் கொண்டாட்டம்

குமாரபாளையத்தில் பெரியார் 143வது பிறந்த நாள் விழா: கட்சியினர் கொண்டாட்டம்
X

குமாரபாளையம் தி.மு.க.சார்பில் பெரியாரின் பிறந்த நாள் விழா சேலம் சாலை கட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. 

குமாரபாளையத்தில் பெரியாரின் 143வது பிறந்த நாள் விழா விடியல் ஆரம்பம், தி.மு.க., மற்றும் இதர கட்சியினர் சார்பில் கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் ராஜவீதியில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா விடியல் ஆரம்பம் சார்பில் அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது. பெரியாரின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை, வினாடி, வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் வைக்கப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசாக புத்தகங்கள், முக கவசங்கள், கிருமிநாசினி மருந்து ஆகியன வழங்கப்பட்டது.

நலவாரிய செல்வராஜ் பள்ளி மாணவ மாணவர்களுக்கு பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைத்தார்கள். நிகழ்வில் கிருஷ்ணமூர்த்தி, சுஜாதா, சந்தியா மற்றும் இலக்கியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

குமாரபாளையம் தி.மு.க.சார்பில் முன்னாள் நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் செல்வராஜ் தலைமையில் பெரியாரின் பிறந்த நாள் விழா சேலம் சாலை கட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. அவரது திருவுருவப்படத்திற்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் வழங்கப்பட்டது. நிர்வாகிகள் விஜய்கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

குமாரபாளையம் தி.மு.க.சார்பில் நகர பொறுப்பாளர் செல்வம் தலைமையில் பெரியாரின் பிறந்த நாள் விழா கட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. அவரது திருவுருவப்படத்திற்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிர்வாகிகள் அன்பரசு, அன்பழகன், பரமசிவம், சின்னபொண்ணு, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
தேய்பிறை அஷ்டமி விழா கோலாகலம்: மல்லசமுத்திரம் காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு