குமாரபாளையம் அருகே சங்கமேஸ்வரர் கோவிலில் திருமுறை பண்ணிசை நிகழ்ச்சி

திருமுறைக்கழக 81வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி குமாரபாளையம் அருகே பவானி சங்கமேஸ்வரர் கோவில் மண்டபத்தில் பழனி தண்டாயுதபாணி தேவஸ்தான ஓதுவார்கள், சண்முகசுந்தர தேசிகர், வெங்கடேச ஓதுவார் பங்கேற்று திருமுறை பண்ணிசை பாடினார்கள்.
குமாரபாளையம் அருகே சங்கமேஸ்வரர் கோவிலில் திருமுறைக்கழகம் சார்பில் திருமுறை பண்ணிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
திருமுறைக்கழக 81வது ஆண்டு நிறைவு விழா குமாரபாளையம் அருகே பவானி சங்கமேஸ்வரர் கோவில் மண்டபத்தில் ஜன. 5 முதல் ஜன. 14 வரை 10 நாட்கள் தினமும் மாலை 06:00 மணி முதல் 09:00 மணி வரை நடைபெறுகிறது.
கொரோனா பரவலால் தமிழக அரசு உத்திரவின்படி ஜனவரி 7,8,9 ஆகிய நாட்களில் நடைபெறவிருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது. ஜனவரி 10,11,12,13 நாட்களில் நிகழ்ச்சிகள் நடைபெறும் என விழாக் குழுவினர் தெரிவித்துள்ள நிலையில் நேற்றுமுன்தினம் திருச்சி சுமதிஸ்ரீ பங்கேற்று, ஆன்மீகம் வழங்கும் வாழ்வியல் நெறிகள் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.
நேற்று பழனி தண்டாயுதபாணி தேவஸ்தான ஓதுவார்கள், சண்முகசுந்தர தேசிகர், வெங்கடேச ஓதுவார் பங்கேற்று திருமுறை பண்ணிசை பாடினார்கள். இன்று மதுரை கூடல் ராகவன் பங்கேற்று,நல்வழி காட்டும் மார்கழி எனும் தலைப்பில் பேசவுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu