மாநில அளவில் தமிழ் பாடத்தில் சதம்: குமாரபாளையம் பள்ளி மாணவன் சாதனை

மாநில அளவில் தமிழ் பாடத்தில் சதம்: குமாரபாளையம் பள்ளி மாணவன் சாதனை
X

மாநில அளவில் தமிழ் பாடத்தில் சதம் அடித்து குமாரபாளையம் ரிலையன்ஸ் பள்ளி மாணவன் ஸ்ரீராம் சாதனை செய்துள்ளார்.

மாநில அளவில் தமிழ் பாடத்தில் சதம் அடித்து குமாரபாளையம் ரிலையன்ஸ் பள்ளி மாணவன் சாதனை செய்துள்ளார்.

மாநில அளவில் தமிழ் பாடத்தில் சதம் அடித்து குமாரபாளையம் ரிலையன்ஸ் பள்ளி மாணவன் சாதனை செய்துள்ளார்.

குமாரபாளையம் ரிலையன்ஸ் பள்ளியில் படித்து வருபவர் ஸ்ரீராம். இவர் 12ம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் பெற்ற மதிப்பெண்கள் விவரம் : தமிழ் 100, ஆங்கிலம் 96, கணிதம் 92, இயற்பியல் 97, வேதியியல் 98, தாவரவியல் 100 . மொத்த மதிப்பெண்கள் 583. இதே பள்ளியில் 12ம் வகுப்பு தேர்வில் 230 பேர் தேர்வு எழுதினர். இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மோனிஷா 593, சந்தோஷ் 588, கிருஷ்ணசாமி 587 முதல், இரண்டாம், மூன்றாம் இடங்கள் பிடித்துள்ளனர். 580க்கு மேல் 11, 570 க்கு மேல் 18, 550க்கு மேல் 36, 500க்கு மேல் 80 பேர் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தமிழ் 1, இயற்பியல் 2,வேதியியல் 4, கம்.சயின்ஸ் 6, தாவரவியல் 1, கணிதம் 1, அக்கவுண்டன்சி 3, கம்ப்யூட்டர் அப்ளிகேசன் 3 பிசினெஸ் கணிதம் 1 ஆகிய பாடப்பிரிவுகளில் 100 சதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

10ம் வகுப்பு தேர்வில் 104 பேர் தேர்வு எழுதியதில் 103 பேர் தேர்வாகியுள்ளனர். பரணி 491, தர்ஷினி 487, ஹேமாவதி 487, ஹயக்கிரீவா 487, தனுஸ்ரீ 482 மதிப்பெண்கள் பெற்று முதல், இரண்டாம், மூன்றாம் இடங்கள் பிடித்துள்ளனர். கணிதம் 4, அறிவியல் 8 பேர் 100 சதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவ, மாணவியர்களை பள்ளியின் தாளாளர் ராமசாமி, செயலர் கோமதி வெங்கடாசலம், பொருளர் கந்தசாமி, முதல்வர் பிரின்சி மெர்லின் உள்ளிட்ட நிர்வாகிகள், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர்கள் பாராட்டினர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்