பேரறிவாளன் விடுதலைக்கு உதவிய தமிழ் அமைப்புகளுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம்

பேரறிவாளன் விடுதலைக்கு உதவிய தமிழ் அமைப்புகளுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம்
X

பேரறிவாளன் விடுதலைக்கு உதவிய தமிழ் அமைப்புகளுக்கு குமாரபாளையத்தில் நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது.

பேரறிவாளன் விடுதலைக்கு உதவிய தமிழ் அமைப்புகளுக்கு குமாரபாளையம் பொதுநல ஆர்வலர்கள் சார்பில் நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அடைந்த பேரறிவாளன் விடுதலைக்கு உதவிய தமிழ் அமைப்புகளுக்கு பொதுநல ஆர்வலர்கள் சார்பில் நன்றி அறிவிப்பு கூட்டம் பள்ளிபாளையம் சாலை, கவுரி தியேட்டர் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவு தூண் அருகே கவிஞர் மல்லை ராமநாதன் தலைமையில் நடைபெற்றது.

மல்லை ராமநாதன் பேசும்போது

பேரறிவாளன் விடுதலைக்கு பல தமிழ் அமைப்புகள், பொதுநல அமைப்புகள், தன்னார்வலர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலரும் பல்வேறு போரட்டங்கள் மூலமாக தங்கள் கோரிக்கையை அரசுக்கு எடுத்துரைத்தனர். அவர்கள் அனைவருக்கும் எங்கள் சார்பில் நன்றிகள் என்றார்.

இதில் பொதுநல ஆர்வலர்கள் ரவி, அன்பழகன், செல்வராஜ், ஆறுமுகம், புவனேஷ், சுவாமிநாதன், சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story