குமாரபாளையம் தாசில்தாரிடம் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மனு அளிப்பு

குமாரபாளையம் தாசில்தாரிடம் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மனு அளிப்பு
X

குமாரபாளையம் தாசில்தார் அலுவலகம் 

குமாரபாளையம் தாசில்தாரிடம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நகர செயலாளர் சித்ரா கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தார்.

குமாரபாளையம் தாசில்தாரிடம் மக்கள் நீதி மய்யம் நகர செயலர் சித்ரா மனு அளித்தார் பின்னர் அவர் அளித்த மனு பற்றி அவர் கூறியதாவது :

குமாரபாளையம் தீயணைப்பு படையினர் 17 பேர் இருக்க வேண்டிய இடத்தில் தற்போது 7 பேர் மட்டுமே உள்ளனர். 10 காலிப்பணியிடங்கள் உள்ளன. தீயணைக்க அல்லது மீட்பு பணிக்கு செல்லும் போது அலுவலகத்தில் யாரும் இல்லாத நிலையம், அங்குள்ள போன் ரெசீவரை கீழே எடுத்து வைத்து விட்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

அவசர அழைப்புக்கு செல்வதற்குதான் இந்த மீட்பு படையினர் உள்ளனர். அசம்பாவிதம் ஏற்பட்டு, தீயணைப்பு நிலையத்திற்கு போன் செய்யும் போது அலுவலகத்தில் யாரும் இல்லாமல், ரெசீவரை கீழே எடுத்து வைத்து செல்வதை காண முடிகிறது.

சேலம் சாலை சவுண்டம்மன் கோவில் பகுதியில் நான்கு சாலை சந்திப்பு உள்ளது. இங்கு சேலம் சாலையில் வேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. ஆகவே இந்த இடத்தில் தம்மண்ணன் வீதி மற்றும் ஜே.கே.கே. வீதி நுழைவுப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும். ஆகிய கோரிக்கையை வலியுறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். அவருடன் நிர்வாகிகள் ரேவதி, உஷா ஆகியோர் சென்றனர்.

Tags

Next Story