போலீசாரை அதிகம் நியமனம் செய்ய மக்கள் நீதி மய்யம், பொதுமக்கள் சார்பில் எஸ்.பி. வசம் மனு!
போலீசாரை அதிகம் நியமனம் செய்ய மக்கள் நீதி மய்யம், பொதுமக்கள் சார்பில் எஸ்.பி. வசம் மனு
குமாரபாளையம் காவல்நிலையத்தில் போலீசார் அதிக அளவில் நியமனம் செய்திட கோரி, மக்கள் நீதி மய்யம் சார்பில், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா மற்றும் பொதுமக்கள் சார்பில் நாமக்கல் எஸ்.பி. வசம் மனு கொடுக்கப்பட்டது.
இதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
குமாரபாளையம் நகரில் உள்ள 33 வார்டுகள், அதனை சுற்றியுள்ள தட்டான்குட்டை, குப்பாண்டபாளையம், பல்லக்காபாளையம் ஊராட்சிகளில் உள்ள சுமார் 45 வார்டுகள் ஆகியவற்றில் சுமார் 2 லட்சம் பேர் உள்ளனர். 50க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், விசைத்தறி, கைத்தறி, ஸ்பின்னிங் மில் உள்ளிட்ட பல தொழில் கூடங்கள், இதர வியாபார கடைகள் உள்ளன. இவைகளிலிருந்து நாள் ஒன்றுக்கு அதிக அளவிலான புகார் மனுக்கள் வந்து கொண்டுள்ளது. இதனை நேரில் சென்று விசாரணை செய்ய, போதிய போலீசார் இல்லை. தினசரி நடக்கும் விபத்துக்கள், பிரேத பரிசோதனை, உள்ளிட்ட பணிகளுக்கு கூட போலீசார் இல்லாததால் பணிகள் மிக தாமதம் ஆகி வரும் நிலை உள்ளது. ஆகவே அதிக எண்ணிக்கையிலான போலீசார் நியமனம் செய்து, வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை பெற்றுத்தர உதவிடவும், போலீசார் பணிச்சுமையை குறைக்கவும் வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu