குமாரபாளையத்தில் சிறை சென்ற மகளிரை பாராட்டிய மக்கள் நீதி மய்யம்

குமாரபாளையத்தில் சிறை சென்ற மகளிரை பாராட்டிய மக்கள் நீதி மய்யம்
X

விவசாயிகள் ஆதரவு போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற மகளிரனியினருக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

குமாரபாளையத்தில் விவசாயிகள் ஆதரவு போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற மகளிரனியினருக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

குமாரபாளையத்தில் நடைபெற்ற விவசாயிகள் ஆதரவு போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற மகளிரனியினருக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் சேலம் மண்டல ஆலோசனை கூட்டத்தில் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சேலம் மண்டல ஆலோசனை கூட்டம் சேலம் ராஜாராம் நகர் கேரளா சமாஜம் மண்டபத்தில் மாநில துணை தலைவர் தங்கவேலு தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சி வளர்ச்சி குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. செப். 27ல் மக்கள் நீதி மய்யம் சார்பில் குமாரபாளையத்தில் நடைபெற்ற விவசாயிகள் ஆதரவு போராட்டத்தில் நகர நிர்வாகிகளுடன், மகளிரணியை சேர்ந்த நகர அமைப்பாளர் சித்ரா, உஷா, 12 வது வார்டு மகளிரணி நிர்வாகி, பழனியம்மாள், 9 வது வார்டு மகளிரணி நிர்வாகி, புஷ்பா, 20 வது வார்டு மகளிரணி நிர்வாகி ஆகிய நால்வரும் பங்கேற்று சிறை சென்றனர்.

போரட்டத்தில் பங்கீட்டு சிறை சென்ற பெண்கள் நால்வருக்கும் மாநில துணை தலைவர் தங்கவேல், மாநில மகளிரணி செயலர் மூகாம்பிகை, மாநில பொது செயலாளர் சரத்பாபு, மாநில மாணவரணி செயலர் ராகேஸ், மாநில விவசாய அணி செயலர் மயில்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்று சால்வை அணிவித்து கவுரவப்படுத்தினர்.

நாமக்கல் மேற்கு மாவட்ட செயலர் காமராஜ், நகர செயலர் சரவணன், 22வது வார்டு செயலர் ரேவதி, வரதராஜ், மணிகண்டன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil