குமாரபாளையத்தில் வேகத்தடை, கழிப்பிடம் திறக்க மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

குமாரபாளையத்தில் வேகத்தடை, கழிப்பிடம் திறக்க மக்கள் நீதி மய்யம் கோரிக்கை
X

குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் ஜே.கே.கே.வீதி, பொது கழிப்பிடம் பராமரிப்பு செய்யப்படாமல் பூட்டி வைக்கபட்டுள்ளது.

குமாரபாளையத்தில் வேகத்தடை, கழிப்பிடம் திறக்க மக்கள் நீதி மய்யம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் ஜே.கே.கே.வீதி, பொது கழிப்பிடம் பராமரிப்பு செய்யப்படாமல் பூட்டி வைக்கபட்டுள்ளது. அதிக குடியிருப்புகள் உள்ள இந்த பகுதி மக்கள் இதனால் அவதிப்பட நேரிடுகிறது.

இதில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விட வேண்டும். மேலும் கவுரி தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே 5 சாலைகள் ஒன்று சேரும் இடத்தில் வேகத்தடை இல்லாததால் வேகமாக வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

சேலம் சாலை சவுண்டம்மன் கோவில் அருகே 4 சாலை சந்திப்பிலும் விபத்துக்கள் அடிக்கடி நடப்பதால் இங்கும் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் சார்பில் மகளிரணி அமைப்பாளர் சித்ரா, உஷா, விமலா ஆகியோர் குமாரபாளையம் நகராட்சியில் மனு கொடுத்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!