குமாரபாளையம் நகராட்சி கமிஷனருக்கு மக்கள் நீதி மய்யத்தினர் வாழ்த்து
குமாரபாளையம் நகராட்சி கமிஷனருக்கு மக்கள் நீதி மய்யத்தினர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு பணியில் சேர்ந்து 23 மாதங்கள் ஆன நிலையில், தற்போது பதவி உயர்வு பெற்று கிரேடு 1 வாணியம்பாடி நகராட்சி கமிஷனராக மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இவரை மக்கள் நீதி மய்யத்தினர் நாமக்கல் மாவட்ட செயலர் காமராஜ் தலைமையில் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதுகுறித்து மாவட்ட செயலர் காமராஜ் கூறுகையில், நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு அனைத்து அரசியல் கட்சியினரிடமும் அன்புடன் பழகி வந்தார். தெரு விளக்கு பழுது, குடிநீர் குழாய் பழுது, சேதமான சாலை, குடிநீர் விநியோகம் உள்ளிட்டவைகள் குறித்து புகார் கூறினால், உடனுக்குடன் சரி செய்து கொடுத்து வந்தார்.
கொரோனா பாதிப்பு காலத்தில் அரசு உத்திரவின்படி, மார்க்கெட்டை பஸ் ஸ்டாண்டிற்கு மாற்றுதல், முழு ஊரடங்கு கடைபிடித்தல், விதி மீறி செயல்படும் விசைத்தறி பட்டறைகள், வணிக நிறுவனங்கள், ஹோட்டல் கடைகள், பேக்கரிகள், டீக்கடைகள் மீது அபராதம், சீல் வைப்பு உள்ளிட்ட நடவடிக்கை எடுத்து கொரோனா பாதிப்பில் இருந்து பொதுமக்களை காப்பதில் முனைப்புடன் செயல்பட்டார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக தூர் வாரப்படாத கோம்பு பள்ளத்தை தூர் வாரி, தற்போது மழைக்காலங்களில் மழைநீர் தடையின்றி செல்ல வழியேற்படுத்தி கொடுத்தார்.
கொரோனா ஊரடங்கால் விசைத்தறி, கைத்தறி தொழிலாளர்கள், அதரவற்றோர் பசி போக்கிட ஸ்பான்சர் ஏற்பாடு செய்து மூன்று வேளைகளும் அம்மா உணவகத்தில் உணவு ஏற்பாடு செய்து அனைவரின் பசியை போக்கி வந்தார். தடுப்பூசி முகாம்கள் அமைத்து, ஆட்டோ, வார்டுகளில் நகராட்சி பணியாளர்கள் மூலம் பிரச்சாரம் செய்தல் ஆகியவற்றின் மூலம் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 100 சதவீத இலக்கை அடைய பாடுபட்டார். தற்போது 90 சதவீதத்திற்கும் மேல் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது என அவர் தெரிவித்தார்.
மாவட்ட துணை செயலர் சிவகுமார், நகர செயலர் சரவணன், மகளிரணி நகர செயலர் சித்ரா, நிர்வாகிகள் ரேவதி, உஷா, சுஜாதா, வட்ட செயலர் யோகராஜ், வார்டு செயலர் பாபு, மூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu