அதிமுக வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற மக்கள்

குமாரபாளையம் விட்டலபுரி பகுதியில் அதிமுக வேட்பாளர் ரேவதிக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
குமாரபாளையம் நகரமன்ற தேர்தலில் அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் நேற்று முதல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்குகளை அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ. தங்கமணிக்கு பெற்று தந்தது குமாரபாளையம் நகரம் என்றால் அது மிகையில்லை. குமாரபாளையம் நகரமன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு திமுகவினர் இதுவரை 4 முறை வெற்றி பெற்றுள்ளார்கள். அதிமுக ஆட்சி இருந்த போதும், இங்கு நகரமன்ற தலைவராக திமுகவினர் வெற்றி பெற்றுள்ளார்கள்.
தற்போது தமிழக ஆட்சி திமுக வசம் இருந்தாலும், குமாரபாளையம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றுள்ளார். குமாரபாளையம் நகரமன்ற தலைவராக அதிமுகவை சேர்ந்தவர் வர வேண்டும், அதற்காக தொண்டர்கள் அயராது உழைக்க வேண்டும் என கட்சியினரை தங்கமணி கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி அதிமுக வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்யும் இடங்களில் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்று வருகிறார்கள். குமாரபாளையம் விட்டலபுரி பகுதியில் அதிமுக வேட்பாளர் ரேவதிக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu