குமாரபாளையத்தில் விஜயகாந்த் உருவபடத்திற்கு பொது மக்கள் கண்ணீர் அஞ்சலி
குமாரபாளையத்தில் விஜயகாந்த் உருவ படத்திற்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
குமாரபாளையத்தில் விஜயகாந்த் உருவ படத்திற்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
திரைப்பட நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் நிறுவனருமான கேப்டன் என அழைக்கப்படும் விஜயகாந்த், உடல்நலமில்லாமல் சென்னை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். இவரது மறைவு செய்தி கேட்டு குமாரபாளையம் நகரில் உள்ள அனைத்து வார்டுகளில் தே.மு.தி.க. கட்சி கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன.
கட்சியின் மாவட்ட பொருளாளர் மகாலிங்கம், நகர செயலாளர் நாராயணசாமி, தலைமையில் அனைத்து வார்டுகளில் விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர். பள்ளிபாளையம் பிரிவு சாலையில் விஜயகாந்த் மறைவிற்கு பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் சார்பில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, மலர்கள் தூவி, மரியாதை செலுத்தினர். இதில் பங்கேற்ற பெரும்பாலோர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதில் ஒன்றிய நிர்வாகி மணியண்ணன், தளபதி லயன்ஸ் சங்க தலைவர் சண்முகசுந்தரம், நில முகவர் சங்க நிர்வாகி பாண்டியன், ம.தி.மு.க. முன்னாள் நிர்வாகி விஸ்வநாதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா, விடியல் பிரகாஷ், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இன்று மாலை அனைத்து கட்சிகள் சார்பில் மவுன ஊர்வலம் மற்றும் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.
குமாரபாளையத்தில் 6 மரங்கள் வெட்டியதற்கு தே. மு. தி. க. கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மாவட்ட தே. மு. தி. க. பொருளாளர் மகாலிங்கம் கூறியதாவது:-
குமாரபாளையம் கண்ணகி நகர் பகுதியில் சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக அப்பகுதியில் 6 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இது குறித்து ஒப்பந்ததாரர் வசம் கேட்ட போது உரிய பதில் இல்லை. அந்த இடத்தில் மரங்கள் வெட்டப்பட்டுத்தான் ஆக வேண்டும் என்ற அவசியமே இல்லை. இருப்பினும் மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu