குமாரபாளையம் அருகே நிமோனியா தடுப்பூசி முகாம் -ஆர்வத்துடன் மக்கள் பங்கேற்பு

குமாரபாளையம் அருகே நிமோனியா தடுப்பூசி முகாம் -ஆர்வத்துடன் மக்கள் பங்கேற்பு
X

 எம்.ஜி.ஆர். நகர். அரசு தொடக்கப்பள்ளியில் நிமோனியா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

குமாரபாளையம்அருகே குப்பாண்டபாளையம் ஊராட்சி எம்.ஜி.ஆர். நகர். அரசு தொடக்கப்பள்ளியில் ஊராட்சி தலைவி கவிதா தலைமையில் நிமோனியா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

நியூமோகாக்கல், நிமோனியா மூளை காய்ச்சல் நோய்களிலிருந்து குழந்தைகளை காப்பதற்கான நியூமோகாக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி செலுத்தும் முகாம் குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் எம்.ஜி.ஆர். நகர் அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.

ஊராட்சி தலைவி கவிதா தலைமை வகித்தார். இது பற்றி வட்டார மருத்துவ அலுவலர் ரேவதி கூறியதாவது: இந்த தடுப்பூசி குழந்தைகளை நியூமோகாக்கல் நோயின் தாக்கத்திலிருந்தும், நிமோனியா மற்றும் மூளை காய்ச்சல் நோயிலிருந்தும் பாதுகாக்கிறது என்று கூறினார். முன்னாள் பி.எம்.ஓ. டாக்டர் செந்தாமரை, சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!