காவிரி வெள்ள பாதிப்பு மக்களுக்கு ஆறுதல் சொன்ன மக்கள் நீதி மய்யத்தினர்

காவிரி வெள்ள பாதிப்பு மக்களுக்கு ஆறுதல் சொன்ன மக்கள் நீதி மய்யத்தினர்
X

குமாரபாளையத்தில் வெள்ள பாதிப்பு மக்களுக்கு மக்கள் நீதி மய்ய மகளிரணியினர் ஆறுதல் கூறினார்கள். 

குமாரபாளையத்தில் வெள்ள பாதிப்பு மக்களுக்கு மக்கள் நீதி மய்ய மகளிரணியினர் சார்பில் டீ, பிஸ்கட் வழங்கபட்டது.

குமாரபாளையம் அருகே காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மக்கள் நீதி மய்ய மகளிரணி நிர்வாகி சித்ரா, உஷா, விமலா உள்ளிட்ட மகளிரணியினர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் டீ, பிஸ்கட் வழங்கினார்கள். ஒவ்வொருமுறை வெள்ளம் வரும்போது சிரமத்திற்கு ஆளாகும் இவர்களுக்கு மாற்று இடம் வழங்கி நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர வேண்டி மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!