குமாரபாளையம் சேலம் சாலையில் எரியாத மின் விளக்குகளால் மக்கள் அவதி

குமாரபாளையம் சேலம் சாலையில் எரியாத மின் விளக்குகளால்  மக்கள் அவதி
X

குமாரபாளையம் சேலம் சாலையில் எரியாத மின் விளக்குகள்.

குமாரபாளையம் சேலம் சாலையில் எரியாத மின் விளக்குகளால் இருள் சூழ்ந்து காணப்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

குமாரபாளையம் நகரின் சேலம் சாலையில் புதியதாக எல்.இ.டி விளக்குகள் சில மாதங்களுக்கு முன்புதான் அமைக்கப்பட்டன. இவை நேற்று இரவு எரியாததால், பள்ளிபாளையம் சாலை முதல் ராஜம் தியேட்டர் வரை இருள் சூழ்ந்து காணப்பட்டது.

இதனால் பொதுமக்களும், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குள்ளாகினர். இந்த சாலையின் நெடுக உள்ள வியாபார நிறுவனங்களின் விளக்குகளின் ஒளியால்தான் பொதுமக்கள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் வாகன திருட்டு, நகை பறிப்பு உள்ளிட்ட பல சமூக விரோத செயல்களும் நடந்திட வாய்ப்பாக அமையும்.

பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட விளக்குகள் பழுதடையால் தினமும் ஒளி வீசிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story