குமாரபாளையம் பேருந்துநிலையம் அருகே பென்சனர் நல சங்கம் சார்பில் போராட்டம்

குமாரபாளையம் பேருந்துநிலையம் அருகே பென்சனர் நல சங்கம் சார்பில் போராட்டம்
X

குமாரபாளையத்தில் பென்சனர் நல சங்கம் சார்பில் சங்கு, சேவண்டி, மணி அடிக்கும் போராட்டம் நடந்தது

குமாரபாளையத்தில் பென்சனர் நல சங்கம் சார்பில் சங்கு, சேவண்டி, மணி அடிக்கும் போராட்டம் நடந்தது.

குமாரபாளையத்தில் பென்சனர் நல சங்கம் சார்பில் சங்கு, சேவண்டி, மணி அடிக்கும் போராட்டம் நடந்தது.

பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி குமாரபாளையத்தில் பென்சனர் நல சங்கம் சார்பில் சங்கு, சேவண்டி, மணி அடிக்கும் போராட்டம் பேருந்து நிலைய வளாகத்தில் வட்டார செயலர் பாலுசாமி தலைமையில் நடந்தது. குறைந்த பட்சம் பென்சன் 9 ஆயிரம் வழங்க வேண்டும், இடைக்காலமாக மூவாயிரம் வழங்க வேண்டும், ஆண்டு உயர்வு உள்ளிட்ட பல சலுகைகளை மீண்டும் அமல்படுத்த வேண்டும், உச்சநீதிமன்ற தீர்ப்பை முறைப்படி அமலாக்க வேண்டும், உயர்ந்த பட்ச பென்சன் வழங்க வேண்டும், எதிர்வழக்காட வேண்டாம், கேரளா போல தமிழ்நாட்டிலும் ஈ.பி.எப். பென்சனர்களுக்கு இரண்டாயிரம் வழங்க வேண்டும், ஆன் லைன் பதிவு திட்டத்தை கைவிட்டு நேரடியாக மனுக்கள் பெற வேண்டும், மூத்த குடிமக்களுக்கு பறிக்கப்பட ரயில்வே கட்டண சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்,என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. நிர்வாகிகள் வெங்கடாசலம், அண்ணாதுரை, சண்முகம், சித்ரா, மல்லிகா உள்பட பலர் பங்கேற்றனர்.

ஒரு அரசு ஊழியர் பணியில் இருக்கும் போது இறந்தால், அவரது குடும்ப உறுப்பினர்கள் பின்வரும் சலுகைகளைப் பெறத் தகுதியுடையவர்கள். விடுப்பு பணமாக்குதல், சிறப்பு வருங்கால வைப்பு நிதி மற்றும் பணிக்கொடை, ஜி.பி.எப். இருப்பு, சொந்த ஊருக்குச் செல்ல பயணப்படி, இறுதிச் சடங்குகளைச் செய்ய முன்பணம், போக்குவரத்துச் செலவுகள், அதிகாரியின் சடலத்தை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல, பணியாளர் குடும்பப் பாதுகாப்பு நிதியின் கீழ் மொத்தத் தொகை, வீடு கட்டும் முன்பணத்தின் கீழ் நிவாரணம், குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, சார்புள்ளவர்களுக்கு கருணை மனை நியமனம், டி.சி.ஆர்.பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம், அகவிலைப்படி, மருத்துவ உதவித்தொகை, பொங்கல் பரிசு. குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

Tags

Next Story
ai in future agriculture