வாகனத்தில் அடிபட்டு மயில் இறப்பு, இறுதி சடங்கு செய்த வனத்துறையினர்

வாகனத்தில் அடிபட்டு மயில் இறப்பு, இறுதி சடங்கு செய்த வனத்துறையினர்
குமாரபாளையம் அருகே வாகனத்தில் அடிபட்டு மயில் இறந்ததால், அதன் உடலை நாமக்கல் வனத்துறையினர் மீட்டு, இறுதி சடங்கு செய்தனர்.
குமாரபாளையம் அருகே சேலம், கோவை புறவழிச்சாலை உள்ளது. இங்கு வட்டமலை பஸ் நிறுத்தம் அருகே, அடையாளம் தெரியாத வாகனத்தில் மோதி, தேசிய பறவை மயில் இறந்து கிடந்தது. இதனை அவ்வழியே சென்ற திருநங்கை ருத்ரா பார்த்தவுடன், நாமக்கல் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். நாமக்கல் வனத்துறை அலுவலகத்திலிருந்து, சுப்பிரமணி என்பவர் வந்து, மயிலின் உடலை பெற்று, அதனை கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து, மாலைகள் மற்றும் தேசியக்கொடி போர்த்தப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதனை பொதுமக்கள் பலரும் உடனிருந்து மரியாதை செலுத்தினர்.
படவிளக்கம் :
குமாரபாளையம் அருகே வாகனத்தில் அடிபட்டு மயில் இறந்ததால், அதன் உடலை நாமக்கல் வனத்துறையினர் மீட்டு, இறுதி சடங்கு செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu