மத நல்லிணக்க காந்தி நினைவு தின பேரணி..!
மத நல்லிணக்க அமைதி பேரணி
குமாரபாளையத்தில் மத நல்லிணக்க காந்தி நினைவு தின பேரணி நடந்தது.
மகாத்மா காந்தியின் நினைவு தின பேரணி மத நல்லிணக்க பேரணியாக நடந்தது. நகர காங்கிரஸ் தலைவர் ஜானகிராமன் தலைமை வகிக்க, நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் பேரணியை துவக்கி வைத்தார். ராஜம் தியேட்டர் முன்பு துவங்கிய பேரணி, நகராட்சி அலுவலகம் காந்தி சிலை முன்பு நிறைவு பெற்றது. காந்தியின் திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் பங்கேற்ற அனைவரும் காந்தியின் சிலையின் முன்பு உறுதிமொழி எடுத்துகொண்டனர். சி.பி.ஐ. கணேஷ்குமார், சி.பி.எம். சக்திவேல், ம.தி.மு.க. நீலகண்டன், மக்கள் நீதி மய்யம் சித்ரா, விடியல் பிரகாஷ், தி.க. சரவணன், தி.வி.க. சாமிநாதன், சி.பி.ஐ. எம்.எல். கதிரவன் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் 74வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
“என் வாழ்க்கையே எனது செய்தி” என்பார் காந்தி. அதுபோல் வரலாற்றின் எந்தவொரு அடுக்கிலும் தவிர்க்க முடியாத அளவுக்கு உயர்ந்த தியாக வாழ்க்கையை வாழ்ந்துள்ளார். அவர் கொண்ட கொள்கையின் உறுதியும் தனது விடாப்பிடியான அறப்போராட்டமுமே இன்று மானுடம் பேசும் கதைகளாகும். நம் தேசத்தின் தந்தை- காந்தி ஜி உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு உத்வேகம் அளித்துள்ளார். ‘பாபு’ என்று அன்பாக அறியப்படும் அவர், உண்மை, அகிம்சை, எளிமை ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒரு உயர்ந்த அதே சமயம் பணிவான ஆளுமை. அபரிமிதமான மனக்கட்டுப்பாடு, தனக்குள் ஒரு புரட்சி, பொறுமை ஆகியவற்றின் பிறப்பான காந்திஜி ஒரு முன்மாதிரியான தலைவராக இருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu