குமாரபாளையம் அருகே பட்டா மாறுதல் முகாம்: 17 மனுக்களில் 6 க்கு உடனடி தீர்வு

குமாரபாளையம் அருகே பட்டா மாறுதல் முகாம்:    17 மனுக்களில் 6 க்கு உடனடி  தீர்வு
X

குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பட்டா மாறுதல் முகாம்.

குமாரபாளையம் அருகே நடைபெற்ற பட்டா மாறுதல் முகாமில் 17 மனுக்கள் பெற்றதில் 6க்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் ஊராட்சி அலுவலகத்தில் பட்டா மாறுதல் முகாம் நடைபெற்றது. இதில் பட்டா மாறுதல், பரப்பு திருத்தம், உறவு முறை குறிப்பிடுதல், பெயர் மாற்றம் உள்ளிட்ட பல கோரிக்கைகள் குறித்து 17 மனுக்களை முகாம் அலுவலரும், மாவட்ட ஆதி திராவிட நல அலுவலருமான மரகதவள்ளி பெற்றுக்கொண்டார்.

காலை 10:00 மணி முதல் மாலை 03:00 மணி வரை இந்த முகாம் நடைபெற்றது. இதில் பெறப்பட்ட மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு 6 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு அதற்குரிய ஆவணங்கள் முகாம் அலுவலர் மரகதவள்ளி மனுதாரரிடம் வழங்கினார்.

இந்த முகாமில் துணை தாசில்தார் காரல்மார்க்ஸ்,ஆர்.ஐ. விஜய், வி.ஏ.ஒ.க்கள் முருகன், தியாகராஜன், செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare