இரவு 9 மணிக்கு மேல் ஈரோட்டிற்கு பஸ் இல்லாததால் பயணிகள் அவதி

இரவு 9 மணிக்கு மேல் ஈரோட்டிற்கு பஸ் இல்லாததால் பயணிகள் அவதி
X

குமாரபாளையத்திலிருந்து இரவு 9 மணிக்கு மேல் ஈரோட்டிற்கு பஸ் இல்லாததால் பயணிகள் அவதி

இரவு 9 மணிக்கு மேல் குமாரபாளையத்தில் இருந்து ஈரோட்டிற்கு பஸ் இல்லாததால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

குமாரபாளையத்தில் இருந்து இரவு 9 மணிக்கு மேல் ஈரோட்டிற்கு பஸ் இல்லாததால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இது பற்றி பயணிகள் கூறியதாவது:குமாரபாளையம் பகுதியில் பெரும்பாலான தொழிலாளர்கள் பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றி இரவு வீட்டிற்கு திரும்ப இரவு 9 மணிக்கும் மேல் ஆகிறது. அப்போது குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் வந்தால் 3 அரசு டவுன் பஸ்கள் ஒரே நேரத்தில் வருகிறது. பயணிகள் ஏற முயற்சித்தால் பஸ்கள் டெப்போவிற்கு போகிறது, யாரும் ஏறாதீர்கள் என்று கூறிவிட்டு பஸ்களை எடுத்து சென்று விடுகிறார்கள். இதனால் பயணிகள் தவிப்புக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள், தொழிலாளர்களின் சிரமத்தை போக்கும் வகையில் குமார பாளையத்திலிருந்து இரவு 9 மணிக்கு மேல் ஈரோட்டிற்கு பஸ்களை இயக்க போக்குவரத்துக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!