அ.தி.மு.க.முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது காசுகள் வீசிய கட்சி தொண்டர்

அ.தி.மு.க.முன்னாள்  அமைச்சர் தங்கமணி மீது காசுகள் வீசிய கட்சி தொண்டர்
X

குமாரபாளையம் தொகுதி, பள்ளிபாளையம் பகுதியில் முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது கட்சி தொண்டர் ஒருவர் காசுகள் வீசினார்.

குமாரபாளையம் தொகுதி, பள்ளிபாளையம் பகுதியில் முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது கட்சி தொண்டர் ஒருவர் காசுகள் வீசினார்.

குமாரபாளையம் தொகுதி, பள்ளிபாளையம் பகுதியில் முன்னாள் அமைச்சர் மீது கட்சி தொண்டர் ஒருவர் காசுகள் வீசினார்.

ஈரோடு லோக்சபா தொகுதியில் நாமக்கல் மாவட்ட காவிரி கரையோர குமாரபாளையம் தொகுதியும் அடங்கும். குமாரபாளையம், பள்ளிபாளையம் இரு நகராட்சிகளை கொண்ட குமாரபாளையம் தொகுதியில் லோக்சபா தேர்தல் பணிகளை அனைத்து அரசியல் கட்சியினர் செய்து வருகிறார்கள். இதன் ஒரு கட்டமாக அ.தி.மு.க. வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் தங்கமணி, பள்ளிபாளையம் பகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது அ.தி.மு.க. தொண்டர் ஒருவர், தங்கமணி மீது சில்லறை காசுகளை வீசி வணங்கினார். இதை சற்றும் எதிர்பாராத முன்னாள் அமைச்சர் தங்கமணி சத்ரு அதிர்ச்சியடைந்து, பின்னர் சுதாரித்துக்கொண்டு, சிரித்தார். இது பற்றி அந்த தொண்டர் செந்தில் வசம் கேட்டபோது,

நான் வெப்படையில் வசிக்கிறேன். திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட முருகன் கோவில்களில், தங்கத்தேர் இழுக்கும் போது , பக்தர்கள் சுவாமி மீது, தங்க காசுகள், வெள்ளி காசுகள் வீசுவார்கள். அதுபோல்தான் நான் முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது, காசுகள் வீசினேன். அவரும் என் தெய்வம் போல்தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!