/* */

குமாரபாளையத்தில் பட்டா நிலத்தில் பூங்கா அமைத்த ஊராட்சி நிர்வாகம்

குமாரபாளையம் அருகே பட்டா நிலத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பூங்கா அமைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் பட்டா நிலத்தில் பூங்கா அமைத்த ஊராட்சி நிர்வாகம்
X

குமாரபாளையம் அருகே சேலம் - கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவு பகுதியில்,  தட்டான்குட்டை ஊராட்சி சார்பில் பூங்கா அமைக்க, அளவிடும் பணி துவங்கியது.

குமாரபாளையம் அருகே, சேலம் - கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவு பகுதியில், தட்டான்குட்டை ஊராட்சி சார்பில் சில ஆண்டுகள் முன்பு பூங்கா அமைக்கப்பட்டது. இந்த இடம், தன்னுடைய இடம் என காவல்துறையில் பணியாற்றும் நபர் ஒருவர், உரிய ஆவணங்களுடன் வருவாய்த்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார். அதன்படி பூங்கா அளவிடும் பணி முன்னாள் ஊராட்சி தலைவர் செல்லமுத்து, வி.ஏ.ஒ. தியாகராஜன் முன்னிலையில் துவங்கியது.

இதுபற்றி முன்னாள் ஊராட்சி தலைவர் செல்லமுத்து கூறியதாவது: இந்த இடத்தின் உரிமையாளர் பல வருடங்களாக வெளியூரில் இருந்ததால், இந்த இடம் குறித்து அவரால் அறிய முடியவில்லை. பல வருடங்களாக இடம் யாரும் பயன்படுத்தப்படாமல் இருந்ததால், அரசு நிலம் என்று எண்ணி பூங்கா அமைக்கப்பட்டது. அரசு வழிகாட்டுதல்படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 22 April 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    AI-ன் வளர்ச்சி தேடுபொறிகளை காணாமல் ஆக்குமா..? பிச்சை என்ன சொல்கிறார்?
  2. லைஃப்ஸ்டைல்
    வாரிக்கொடுக்கும் வாட்ஸ்ஆப் மொழிகள்..! தேடி படீங்க..!
  3. லைஃப்ஸ்டைல்
    சீற்றத்தை அடக்கி ஆளும் சீறாப்புதல்வன், 'மௌனம்'..!
  4. கும்மிடிப்பூண்டி
    தலைமை ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா!
  5. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  6. வீடியோ
    Savukku Shankar வழக்கில் அதிரடி திருப்பம் | நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
  7. லைஃப்ஸ்டைல்
    இனிய காதல் மேற்கோள்கள்!
  8. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  9. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  10. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்