பட்டா இடத்தில் பூங்கா அமைப்பு: இடத்தை மீட்டுத்தர உரிமையாளர் கோரிக்கை

பட்டா இடத்தில் பூங்கா அமைப்பு: இடத்தை மீட்டுத்தர உரிமையாளர் கோரிக்கை
X

குமாரபாளையம் அருகே கத்தேரி பிரிவு பகுதியில் தட்டான்குட்டை ஊராட்சி சார்பில் அமைத்த பூங்கா இடம் தனியாருக்கு சொந்தமானதால் அதனை அளவிடும் பணி துவங்கியது.

குமாரபாளையம் அருகே பட்டா நிலத்தில்பூங்கா அமைக்கப்பட்டதால், இடத்தை தரக்கோரி உரிமையாளர் ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை.

குமாரபாளையம் அருகே பட்டா நிலத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பூங்கா அமைக்கப்பட்டதால், பூங்கா அமைத்த பட்டா இடத்தை தரக்கோரி இட உரிமையாளர் ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவு பகுதியில் தட்டான்குட்டை ஊராட்சி சார்பில் சில ஆண்டுகள் முன்பு பூங்கா அமைக்கப்பட்டது. இந்த இடம் தன்னுடையது என காவல்துறையில் பணியாற்றும் நபர் ஒருவர் உரிய ஆவணங்களுடன் வருவாய்த்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதன் படி பூங்கா அளவிடும் பணி முன்னாள் ஊராட்சி தலைவர் செல்லமுத்து, வி.ஏ.ஒ. தியாகராஜன் முன்னிலையில் துவங்கியது.

இது பற்றி முன்னாள் ஊராட்சி தலைவர் செல்லமுத்து கூறியதாவது:- இந்த இடத்தின் உரிமையாளர் பல வருடங்களாக வெளியூரில் இருந்ததால், இந்த இடம் குறித்து அவரால் அறிய முடியவில்லை. பல வருடங்களாக இடம் யாரும் பயன்படுத்தப்படாமல் இருந்ததால், அரசு நிலம் என்று எண்ணி பூங்கா அமைக்கப்பட்டது. இந்த இடத்தை தனக்கு கொடுக்க சொல்லி ஊராட்சி நிர்வாகத்திற்கு இடத்தின் உரிமையாளர் கோரிக்கை விடுத்துள்ளார். பூங்கா அமைக்க செலவான சுமார் 25 லட்சம் ரூபாயை அரசு வசூலிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிலர் செய்வதறியாது இருந்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
ai marketing future