பள்ளிபாளையம் சேசஷாயி பேப்பர் மில்லில் காகித தின கொண்டாட்டம்..!
காகித தினத்தையொட்டி நடந்த மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டி.
பள்ளிபாளையம் சேசஷாயி பேப்பர் மில்லில் காகித தினம் கொண்டாடப்பட்டது.
இது குறித்து சேஷாயி பேப்பர் மில் நிர்வாக இயக்குனர் காசிவிஸ்வநாதன் கூறியதாவது:
மகாத்மா காந்தி காகிதத்தின் முக்கியத்துவத்தை பற்றி வலியுறுத்தி வந்தார். கையால் தயாரிக்கும் காகித நிறுவனம் நிறுவ இந்திய விஞ்ஞானிகளை வற்புறுத்தினார். முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, கையால் செய்யப்பட்ட காகித தயாரிப்பின் பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில் ஆக. 1, 1940ல் புனே நகரில், முதன் முதலாக கையால் தயாரிக்கப்படும் காகித நிறுவனத்தை துவக்கினார்.
இந்திய அரசியலமைப்பின் சில பிரதிகள் அச்சிடபட்ட்டன. அன்று முதல் ஆக. 1 காகித தினமாக கொண்டாடப்படுகிறது. உலகின் காகித உற்பத்தியின் இந்தியா காகித உற்பத்தி கிட்டத்திட்ட 5 சதவீதம் ஆகும். காகித தொழில் மூலம் நேரடியாக 5 லட்சம் பேருக்கும், மறைமுகமாக 15 லட்சம் பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது. காகிதத்தில் நான்கு வகை உள்ளது.
அச்சிடுதல் மற்றும் எழுதுதல் தாள், செய்தித்தாள் தாள், பேக்கிங் பேப்பர், டிஸ்யூ பேப்பர் ஆகும். மேற்படி காகிதங்கள் குழந்தைகளுக்கு கல்வி கற்பித்தல், கல்வியறிவை பரப்புதல், செய்தித் தாள் மூலம் செய்திகளை பரப்புதல், நல்ல அழகிய பேக்கிங் மூலம் விரயத்தை குறைத்தல், ஆரோக்கியத்தை பாதுகாத்தல் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துதல் போன்ற உன்னத நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.
இந்த காகிதம் மூன்று அடிப்படை பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. விவசாயிகளிடமிருந்து மரம், கரும்பு சக்கை மற்றும் வைக்கோல் போன்ற விவசாய கழிவுகள் மற்றும் மறு சுழற்சி செய்யப்பட்ட கழிவு காகிதம். சுமார் 71 சதவீதம் காகிதம் மறுசுழற்சி செய்யபட்ட கழிவு காகிதத்திலிருந்தும், மரத்திலிருந்து பண்ணை காடுகள் மற்றும் 8 சதவீதம் விவசாயக் கழிவுகளிலிருந்து பெறப்படுகிறது. காடுகளை அழிப்பதன் மூலம்தான் காகிதம் தயாரிக்கப்படுகிறது என்ற செய்தி தவறானது.
இவ்வாறு அவர் கூறினார்.
காகித தினம் குறித்து சதுரங்க போட்டி 350 மாணவ, மாணவியர்களுக்கும், ஓவிய போட்டி 220 பேருக்கும், கட்டுரை போட்டி 126 பேருக்கும் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu