பள்ளிபாளையம் சாலைகளில் குவியும் பேப்பர் கப் குப்பைகள்

பள்ளிபாளையம் சாலைகளில் குவியும் பேப்பர் கப் குப்பைகள்
X

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வரும் சூழலில் அதை கட்டுப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில் தமிழகம் முழுவதும் இயங்கும் பேக்கரி டீ கடைகள் வழங்கப்படும் உணவு மற்றும் டீ காபி வகைகள் பார்சலில் மட்டுமே வழங்க வேண்டும், கடையினுள் அனுமதி அளிக்கக் கூடாது என கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் விளைவாக கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் கடையில் வாயிலில் நின்று தங்களை தேவையான உணவுப் பொருட்களை வாங்கி சென்று வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் பஸ் நிறுத்த பகுதியை ஒட்டி ஏராளமான டீ கடை பேக்கரி கடைகள் இயங்கி வருகின்றன. தமிழக அரசின் அறிவிப்பின்படி வழங்கப்படும் பார்சல் டீ,காபியை அருந்தும் வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள குப்பை தொட்டிகளில் அல்லது சாலை ஓரத்தில் வீசி செல்கின்றனர். இதனால் பேப்பர் கப் குப்பை உள்ளிட்டவை கடந்த காலங்களை காட்டிலும் தற்போது அதிக அளவில் உள்ளதால் பள்ளிபாளையத்தில் பல்வேறு பகுதிகள் குப்பை மேடு பகுதிகளாக காட்சி அளிக்கின்றன. ஏற்கனவே குப்பை விவகாரத்தில் விழி பிதுங்கிப் போய் உள்ள பள்ளிபாளையம் நகராட்சியினர் பார்சல் டீ பேப்பர் கப் குப்பைகளால் நிலைதடுமாறி வருகின்றனறர்.

Tags

Next Story
ai future project