குமாரபாளையம் அருகே பஞ்சுமாயி அம்மன் கும்பாபிஷேக விழா

குமாரபாளையம் அருகே பஞ்சுமாயி அம்மன் கும்பாபிஷேக விழா
X

குமாரபாளையம் அருகே படைவீடு பகுதி அல்லிநாயக்கன்பாளையம் கிராமத்தில் பஞ்சுமாயி அம்மன் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

குமாரபாளையம் அருகே பஞ்சுமாயி அம்மன் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

குமாரபாளையம் அருகே படைவீடு பகுதி அல்லிநாயக்கன்பாளையம் கிராமத்தில் பஞ்சுமாயி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா ஆக. 27ம் நாள் கணபதி பூஜையுடன் துவங்கியது. காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் மேளதாளங்களுடன் நடைபெற்றது. மூன்று கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு நேற்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

யாகசாலை புரோகிதர்கள் கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றினார்கள். மேலும் கோவில் வளாகத்தில் உள்ள பஞ்சுமாயி அம்மன், வைர பெருமாள், சப்த கன்னிமார், மலுக்கன் துலுக்கனார், துண்டடி வீரன், கண்ணடியான், எதிரடியான் உள்ளிட்ட சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன.

சுற்றுப்புற பகுதியில் உள்ள பல கிராமங்களில் இருந்து பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. யாகசாலை பூஜைகளை ஜலகண்டாபுரம் பாண்டுரங்க சுவாமிகள் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

Tags

Next Story