குமாரபாளையம் வட்டமலையில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலம்

குமாரபாளையம் வட்டமலையில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலம்
X

குமாரபாளையம் வட்டமலையில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி வேலாயுதசுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

குமாரபாளையம் வட்டமலையில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

பங்குனி உத்திர நாளையொட்டி குமாரபாளையம் அருகே பிரசித்தி பெற்ற வட்டமலை வேலாயுதசாமி திருகோவிலில், காவிரியில் இருந்து தீர்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷக, அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட்டன. 30க்கும் மேற்பட்ட கிராமப்பகுதிகள், குமாரபாளையம் நகரம் உள்ளிட்ட பகுதியில் இருந்து பெருமளவிலான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.

தக்கார் மற்றும் செயல் அலுவலர் கஸ்தூரி உடனிருந்து பூஜை பணிகள் மேற்பார்வையிட்டார். விழாக்குழுவினர் 100க்கும் மேற்பட்டோர் பச்சை வேட்டி அணிந்து பக்தர்களுக்கு கோவிலில், அன்னதான கூடத்தில் சேவை செய்தனர். சிறப்பு மருத்துவ முகாம்களும் ஏற்பாடு செய்யபட்டிருந்தன. சங்ககிரி இன்ஸ்பெக்டர் தேவி தலைமையிலான போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!