முன்கூட்டிய போனஸ் வழங்க பள்ளிபாளையத்தில் விசைத்தறியாளர்கள் கோரிக்கை
பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ். சங்க அலுவலகத்தில், நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கக் கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கம் (சிஐடியு) மாவட்ட குழு கூட்டம் பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ். சங்க அலுவலகத்தில் சங்க மாவட்ட தலைவர் மோகன் தலைமையில் நடைபெற்றது. இதில் சங்க மாவட்ட செயலாளர் அசோகன், சங்க மாவட்ட பொருளாளர் முத்துக்குமார், சிஐடியு மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி, சங்க மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: நாமக்கல் மாவட்டம் முழுவதும் விசைத்தறி மற்றும் அதன் சார்ந்த துறைகளில் சுமார் ஒன்றைரை லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு தீபாவளி பண்டிகை காலத்தில் போனஸ் வழங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, பள்ளிபாளையம் பகுதி விசைத்தறி தொழிலாளர்களுக்கு 11,11,2020 அன்று பள்ளிபாளையம் பகுதி உரிமையாளர்கள் நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கம் (சிஐடியு)வோடு 9/50% (சதம்) வழங்குவதாக ஏற்படுத்தி கொண்ட ஒப்பந்தபடி இந்தாண்டு தீபாவளிக்கு 15 நாட்களுக்கு முன்பே வழங்க வேண்டும்,
மாவட்டம் முழுவதும் உள்ள ஆண் -பெண் விசைத்தறி தொழிலாளர்களுக்கு கடந்தாண்டை விட கூடுதலாக போனஸ் வழங்க வேண்டும், அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சுமார் 150% உயர்ந்துள்ளதால் மாவட்டம் முழுவதும் உள்ள விசைத்தறி தொழிலாளர்களுக்கு 75% கூலி உயர்வு விசைத்தறி நிர்வாகங்கங்கள் வழங்க வேண்டும்.
தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை தொழிலாளர் துறையும், மாவட்ட ஆட்சி நிர்வகமும், தமிழக அரசும், தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிபாளையம் பகுதி விசைத்தறி தொழிலாளர்களுக்கு கடந்த 15.3.2019 அன்று போடப்பட்ட 10% (சதம்) கூலி உயர்வு இரண்டாண்டுக்கு வழங்குவது என ஒப்பந்தம் ஆனது. அந்த ஒப்பந்தம் 15/3/2021 அன்றோடு முடிவடைந்துவிட்டது எனவே பள்ளிபாளையம் விசைத்தறி உரிமையாளர்கள் உடனடியாக பேச்சுவார்த்தையை துவக்கி புதிய கூலி உயர்வு வழங்க ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu