பள்ளிபாளையத்தில் கொரோனா நிலவரம் எப்படி?

பள்ளிபாளையத்தில் கொரோனா நிலவரம் எப்படி?
X
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில், புதியதாக 10 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழலில், தினசரி பாதிப்புக்ளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதையடுத்து தமிழக அரசு பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நேற்று மட்டும், 10 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிபாளையம் பகுதியில் மட்டும் இதுவரை, 51 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மூவர் தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில், 4-பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 44- நபர்கள் சிகிச்சையில் உள்ளதாக, சுகாதாரத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்