பள்ளிபாளையம் லாரி டிரைவர் தீக்குளித்து உயிரிழப்பு: உரிமையாளர் உட்பட 3பேர் கைது

பள்ளிபாளையம் லாரி டிரைவர் தீக்குளித்து உயிரிழப்பு: உரிமையாளர் உட்பட 3பேர் கைது
X
பள்ளிபாளையம் அருகே லாரி டிரைவர் செந்தில் தீக்குளித்து உயிரிழந்த வழக்கில்,லாரி உரிமையாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் வெப்படை பகுதியை சேர்ந்தவர் லாரி உரிமையாளர் மாணிக்கம்.இவரிடம் மோகனூரை சேர்ந்த செந்தில் என்பவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் லாரியில் இருந்த ₹25,000 பணத்தை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக லாரி டிரைவர் செந்தில்எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து லாரி டிரைவர் செந்திலை நீண்ட நாட்களாக தேடிவந்த லாரி உரிமையாளர் நேற்று முன்தினம் செந்தில் மற்றும் அவருடைய மகன் இருக்கும் இடத்தை கண்டறிந்து அவர்களை அழைத்து பணத்தை கேட்டுள்ளார். அப்போது செந்தில் தன்னிடம் பணம் எதுவும் இல்லை என கூறியதாக சொல்லப்படுகிறது. இதன்பிறகு வெப்படையில் உள்ள லாரி ஆபீஸில் செந்திலை அழைத்து வந்த லாரி உரிமையாளர் மாணிக்கம்,டிரைவர் செந்தில் இருவரும் லாரி ஆபீஸில் இரவு படுத்து உறங்கி உள்ளனர். அதிகாலை தனது வீட்டிக்கு லாரி உரிமையாளர் சென்ற நிலையில் லாரி ஓட்டுநர் செந்தில் அருகில் இருந்த டீசலை எடுத்து ஊற்றிக் கொண்டு தீக்குளித்து உடல் கருகிய நிலையில் அதே இடத்தில் இறந்து போனார்.

இதனையடுத்து வெப்படை புறக்காவல் நிலையம் மற்றும் பள்ளிபாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையின் முடிவில் லாரி உரிமையாளர் மாணிக்கம் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் மேல் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!